தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாண முதலமைச்சர் வேட்பாளரான முன்னாள் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இன்று திங்கட்கிழமை சந்தித்துள்ளனர்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையிலான தூக்குழுவினருக்கும் விக்னேஸ்வரனிற்கும் இடையிலான சந்திப்பு நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரனது இல்லத்தில் இடம்பெற்றுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஷ் பிரேமச்சந்திரன், ஹென்றி மகேந்திரன், என்.சிறிகாந்தா மற்றும் க.சர்வேஸ்வரன் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.