விக்னேஷ்வரனுக்கு விஜயகாந்த் வாழ்த்து

vijakanthவடமாகாண சபைக்கான முதலமைச்சராக தெரிவு செய்யப்பட்டுள்ள விக்னேஷ்வரனுக்கு தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

இலங்கை வடக்கு மாகாணத்தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பிற்கும், அமையவிருக்கும் அரசிற்கு தலைமை ஏற்று முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள முன்னாள் நீதிபதி சி.வி.விக்னேஷ்வரனுக்கும் என் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் ஈழத்தமிழர்கள் ஜனநாயகத்தின் மீது தங்களுக்கு இருக்கும் நம்பிக்கையை மிக தெளிவாக உணர்த்தி இருக்கிறார்கள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதை புரிந்துகொண்டு இலங்கை அரசு அந்த பகுதியில் இருக்கிற இராணுவத்தை உடனடியாக விலக்கிக்கொண்டு, புதிதாக ஆட்சிக்கு வந்துள்ளவர்கள் ஆட்சி நடத்திட ஒத்துழைப்பு தருவதோடு, அதிகார பரவலையும் தந்திடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.