வாள்வெட்டுக்கு இலக்கான வயோதிபர் மரணம்

body_foundமுன்விரோதம் காரணமாக வாள்வெட்டுக்கும் அசிட் வீச்சுக்கும் இலக்கான வயோதிபர் உயிரிழந்துள்ளார்.நாவாந்துறை ஒஸ்மானிய கல்லூரி வீதியைச் சேர்ந்த 53 வயதான அப்துல் காதர் முஹம்மது அலிம் நிஹார் என்ற வயோதிபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழ். நாவாந்துறை, பொம்மைவெளி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை 5.30 மணியளவில் குறித்த வயோதிபர் வாள்வெட்டுக்கும் அசிட் வீச்சுக்கு இலக்காகினார்.

இவர் வாள்வெட்டினால் தனது இடது கையை இழந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த நிலையிலேயே நேற்று புதன்கிழமை இரவு உயிரிழந்துள்ளதாக யாழ். சிறுகுற்றத்தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி ஏ.டபிள்யூ.எல்.விக்கிரமராச்சி தெரிவித்தார்.

குடும்பத்திற்குள் ஏற்பட்ட பழைய பகை காரணமாக உறவினர் ஒருவர் இவரை வாளினால் வெட்டியதுடன், அசிட் வீசியுள்ளதாகவும் அவரது மகள் தெரிவித்தார்.

வாள்வெட்டு மற்றும் அசிட் வீச்சு சம்பவம் தொடர்பாக யாழ். போக்குவரத்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.