அல்லைப்பிட்டி முதலாம் வட்டாரப் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (22) மாலை இடம்பெற்ற வாள்வெட்டில் அல்லைப்பிட்டி ஏழாம் வட்டாரத்தைச் சேர்ந்த பொன்னையா சிவலிங்கம் (வயது 55) என்பவர் உயிரிழந்ததாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
வாள்வெட்டை மேற்கொண்ட சந்தேக நபரின் வீட்டில் இருவரும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்தனர். இதன்போது, இருவருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு அது வாள்வெட்டில் முடிவடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் கூறினர்.