வாள்களுடன் இருவர் கைது

குழு மோதலொன்றுக்காக வாள்களை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற இரு சந்தேகநபர்களை வல்வெட்டித்துறை நகர பகுதியில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) இரவு கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 மற்றும் 32 வயதுடையவர்கள் எனவும் அவர்களிடமிருந்து இரண்டு வாள்கள் மற்றும் முச்சக்கரவண்டி ஆகியன பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மேற்படி இரு சந்தேகநபர்களும் தொண்டைமானாறு பகுதியில் குழு மோதலில் ஈடுபடுவதற்கு சென்றதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இருவரையும் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.