வாரியபொல யுவதி பொலிஸில் முறைப்பாடு

வாரியபொலயில் இளைஞர் ஒருவரை அறைந்தார் என்று கூறப்படும் 21 வயதுடைய திலினி அமல்கா என்ற யுவதி பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண செவ்வாய்க்கிழமை (26) தெரிவித்தார்.

146

வாரியபொல பஸ் நிலையத்தில் வைத்து தன்னை வார்த்தை மற்றும் சைகை மொழி மூலம் துஷ்பிரயோகப்படுத்தினார் என்ற காரணத்திற்காவே தான் அவ்விளைஞனை அவ்விடத்திலேயே அறைந்ததாகவும் அம்முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

எனினும், அடி வாங்கிய இளைஞன் அவருடைய செவியில் ஏற்பட்டுள்ள சில கோளாறு காரணமாக குருணாகல் வைத்தியசாலையில் செவ்வாய்கிழமை (26) அனுமதிக்கப்பட்டார்.

இச்சம்பவம், குறித்து முறைப்பாடொன்றை மேற்கொள்வதற்கு தனக்கு எவ்வித எண்ணம் இல்லை என்று அவ்விளைஞன் பொலிஸ் விசாரணையின் போது தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய இருவரும் வாரியபொலை பொலிஸாரினால் விசாரணைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தொடர்புடைய செய்திகள்.
வாரியப்பொல சம்பவம் – வெளிவரும் உண்மைகள்

Recommended For You

About the Author: Editor