வானிலிருந்து மர்மப்பொருள் விழுந்தால் தொடவேண்டாம்: சுகாதார அமைச்சு எச்சரிக்கை

வானத்திலிருந்து மர்மப்பொருட்கள் ஏதாவது பூமியை நோக்கி விழுந்தால், அப்பொருட்களை தொடவேண்டாம் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.வானிலிருந்து விழும் மர்மப் பொருட்களில் அமிலங்கள் மற்றும் உலோகப் பொருட்கள் காணப்படக்கூடும் என்றும் அதனால் அவற்றைத் தொடுவதால் சிலவேளை ஆபத்துக்கள் ஏற்படக்கூடும் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் அவ்வாறான பொருட்களை யாராவது கண்டெடுத்தால், அதனை கொழும்பு, பொரளையில் அமைந்துள்ள மருத்துவ பரிசொதனை நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் தகவலறிந்தவர்கள், பொரளை மருத்துவ பரிசோதனை நிலைய தொலைபேசிய இலக்கமான 011 – 2693532 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்தது.

Recommended For You

About the Author: Editor