வாடகை வாகனங்களை விற்பனை செய்த இளைஞன் கைது

arrest_1யாழ்ப்பாணம், பெட்றி வீதி பிரதேசத்தில் வாகனங்களை வாடகைக்கு பெற்று வேறு நடபர்களிடம் விற்பனை செய்துவந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், பெட்றி வீதியைச் சேர்ந்த 23 வயதான சந்தேகநபர் வாடகைக்கு பெற்ற வாகனம் ஒன்றுடன் நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நபர் கடவத்த பிரதேசத்தில் ஒருவரிடமிருந்து 13 வாகனங்களை வாடகைக்கு பெற்று யாழ்ப்பாணத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார்.

இவ்வாறு வாடகைக்கு எடுத்துச் சென்ற வாகனங்களுக்கு வாடகை செலுத்தாத நிலையில், வாகன உரிமையாளரினால் யாழ். பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரிடமிருந்து 9 கார் மற்றும் 6 வேன்களும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நபர் இன்று (15) யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.