வாக்காளர் பதிவு நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கோரிக்கை

தற்போது இடம் பெற்றுவரும் 2013 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் கிராம அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்புக்களை வழங்குமாறு பொது மக்களை பிரதித் தேர்தல் ஆணையாளர் எம்.எம்.மொகமட் கேட்டுக் கொண்டார்.

வாக்காளர் பதிவு தொடர்பில் நேற்றுக் காலை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது:

இலங்கையில் முதன் முதலாக இந்த வருடம், ஜூன் மாதம் முதலாம் திகதியை வாக்காளர் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ளோம்.

இதற்காக இந்த மாதம் 15 ஆம் திகதி முதல் 31 ஆம் திகதி வரையில் வாக்காளர் பதிவுக்குரிய (பி.சி) படிவங்கள் கிராம சேவையாளரால் விநியோகிக்கப்படும்.

voters-listகிராம சேவையாளர்கள் வீட்டுக்கு வரும் போது குடும்பத்துக்குப் பொறுப் பானவர்கள் வீட்டிலிருந்து விண்ணப் பப்படிவத்தைப் பெற்று பூரணப் படுத்திக் கொடுக்க வேண்டும்.

இயலுமானவரையில் இந்தக் காலப் பகுதியில் வீடுகளில் மக்கள் இருந்து இந்தப் பதிவுகளை மேற்கொள்ள உதவ வேண்டும்.

வாக்காளர் பதிவு விண்ணப்பங்கள் கிடைக்காதவர்கள் தமது பகுதி கிராமசேவர்களுடன் தொடர்பு கொண்டு விண்ணப்பப் படிவங்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.

யாழ்.மாநகரசபை, வல்வெட்டித்துறை நகரசபை, சாவகச்சேரி நகரசபை, பருத்தித்துறை நகரசபை எல்லைக் குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் விநியோகிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்கள் ஜூன் 2 ஆம் திகதி மீளப்பெறப் படும்.

அன்றையதினம் பெற்றுக் கொள்ளத் தவறின் ஜூன் 5 ஆம் திகதி மீளப்பெற்றுக் கொள்ள வேண்டும். ஏனைய பகுதிகளில் ஜூலை 15 ஆம் திகதிக்கு முன்னர் மீளப்பெறப்படுதல் வேண்டும்.

இதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ள திலிருந்து நீக்கப்பட்டவர்கள், புதிதாக இணைக்கப்பட்டவர்களின் பெயர் விவரம் என்பன காட்சிப்படுத்தப்படும்.

இதன் பின்னர் மக்கள் உரிமைக் கோரிக்கை படிவத்தினூடாக மக்கள் தமது ஆட்சேபனையை தெரிவிக்க முடியும் என்றார்.