வாகன விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் காயம்

accidentயாழ்ப்பாணம், கோப்பாய் சந்தியில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பகுதியினூடாகப் பயணித்த முச்சக்கர வண்டியொன்றும் வான் ஒன்றும் மோதியதை அடுத்தே இந்த விபத்து சம்பவித்துள்ளது. இதன்போது முச்சக்கரவண்டியில் பயணித்த நால்வரே காயமடைந்துள்ளனர்.

இவ்வாறு காயமடைந்த நால்வரும் யாழ். வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.