வாகனங்களின் வேகம் அதிகரிக்கப்பட வேண்டும் – ஜனாதிபதி

mahintha_CIபுனரமைக்கப்பட்ட அனைத்து வீதிகளிலும் வாகனங்களை வேகமாக செலுத்த வேண்டியது கட்டாயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

வேகமாக வீதியில் செல்லும் வாகனங்களை பொலிஸார் விசாரணைக்கு உட்படுத்துகின்றனர்.

இதற்கு காரணம் பழைய சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே ஆகும் எனவும் ஜனாதிபதி சுட்டிக் காட்டினார்.

இவ்விடயம் குறித்து பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

பாதெனிய – அனுராதபுர வீதியை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி

30 வருட யுத்தம் நடந்த போதும் இறுதி 5 நாட்களும் என்ன நடந்தது என்றே கேள்வி எழுப்பப்படுகிறது! – ஜனாதிபதி