வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியாளர்களில் மேலும் இருவருக்கு கோரோனா!!

வவுனியா – நெடுங்கேணி வீதி சீரமைப்புப் பணிகளில் ஈடுபட்டுவரும் மேலும் இரண்டு தொழிலாளர்களிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் மூவருக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வீதிச் சீரமைப்பு பணியில் ஈடுபடும் 5 தொழிலாளர்களுக்கு கோரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த தகவலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.

வவுனியா பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனையின் அறிவுறுத்தலில் வவுனியா – நெடுங்கேணி வீதிச் சீரமைப்புப் பணியில் ஈடுபட்ட ஊழியர்களது மாதிரிகள் பெறப்பட்டு பிசிஆர் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டது.

Recommended For You

About the Author: Editor