வவுனியா கல்வாரி திருத்தலத்தில் சிலைகள் சேதம்

damageவவுனியா, பெரிய கோமரசன்குளம் பகுதியில் அமைந்துள்ள கல்வாரி திருத்தலத்தில் இருந்த 08 சிலைகள் இனந்தெரியாதோரால் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அத்திருத்தலத்தின் பங்குத்தந்தை இன்று வியாழக்கிழமை காலை (24) முறைப்பாடு செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

இத்திருத்தலத்தில் மின்குமிழ்களை அணைப்பதற்காக இன்றையதினம் (24) அதிகாலை இங்கு வந்த பொதுமக்கள் சிலர், சிலைகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டனர்.

இது தொடர்பில் பங்குத்தந்தைக்கு இவர்கள் தெரியப்படுத்தினர்.

கல்வாரி திருத்தலத்திலுள்ள 15 தொகுதி சிலைகளில் 08 சிலைகள் நேற்று புதன்கிழமை (23) இரவு உடைக்கப்பட்டுள்ளன. சில சிலைகள் பாரியளவில் சேதமாக்கப்பட்டுள்ளன. யூதர்களாக சித்தரிக்கப்பட்டிருந்த சிலைகளே அதிகளவில் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளன. மாதா சிலையொன்றின் கையும் உடைத்துச் சேதமாக்கப்பட்டுள்ளதாக இத்திருத்தலத்தின் தலைவர் என்.அருளானந்தம் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor