வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மீது சூடு

வவுனியா, பெரிய உலுக்குளம் பகுதியில் பொலிஸார் மீது வியாழக்கிழமை (05) அதிகாலை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதில் பொலிஸ் அதிகாரி ஒருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா, பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் இன்று அதிகாலை 2 மணியளவில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீதே இனந்தெரியாதோர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன் காரணமாக காலில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியை உடனடியாக வவுனியா பொது வைத்தயிசாலையில் அனுமதித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை செட்டிக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts