வவுனியாவில் தீப்பந்த போராட்டம்

காணாமல் போன உறவுகளைத் தேடிக் கண்டு பிடித்துத் தருமாறு கோரியும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் வவுனியாவில் தீப்பந்த போராட்டம் நடைபெறுகிறது. இன்று முற்பகல் 11 மணிக்கு வவுனியா கந்தசுவாமி கோயிலில் இப் போராட்டம் ஆரம்பமானது. கொழும்பில் பொதுநலவாய மாநாடு இடம்பெறுகின்ற நிலையில் இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்தப் போராட்டம் வவுனியா பிரஜைகள் குழுவினால் முன்னெடுக்கப்படுகிறது. இப் போராட்டத்தில் காணாமற்போனோரின் உறவுகள் மற்றும் தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சிவில் சமூக பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டனர்