வவுனியாவில் சமுர்த்தி வங்கி ஆவணங்கள் தீக்கிரை!

வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியில் சமுர்த்தி வங்கிச் சங்கத்தின் ஆவணங்கள் தீயிடப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து மேலும் தெரியவருவதாவது:-

வவுனியா, சின்னப்புதுக்குளம் பகுதியில் உள்ள சமுர்த்தி வங்கி கட்டடத்தில் இருந்து புகை வருவதை அவ் வீதியால் சென்றவர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து தீ அணைக்கப்பட்டுள்ளது. வங்கியின் யன்னல் உடைக்கப்பட்டு, அங்கிருந்த ஆவணங்களும் தீவைக்கப்பட்டுள்ளன. இது குறித்து தாம் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் என்று வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.