வவுனியாவில் கடுகதி ரயிலில் மோதி மாணவன் உயிரிழப்பு

வவுனியாவில் நேற்று காலை 10.30மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்த மேலும் தெரியவருகையில்,

நேற்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற கடுகதி ரயிலில் மாணவன் ஒருவர் காதில் கெட் செட் போட்டுக்கொண்டு சென்றபோது கடுகதி ரயிலில் மோதியதில் உயிரிழந்துள்ளார்.

வவுனியா அவுசுதுபிட்டிய பகுதியைச் சேர்ந்த அமில சந்தகெலி என்ற 17வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளார்.

Related Posts