வவுனியாவில் கடத்தப்பட்ட வர்த்தகர் விடுவிக்கப்பட்டார்

வவுனியாவில் கடத்தப்பட்ட பிரபல வர்த்தகர் விடுவிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியாவிலுள்ள பிரபல அரிசியாலையான எஸ்.எஸ். ஆர் அரிசி ஆலையின் உரிமையாளரான சண்முகம் செல்வராசா நேற்று முன்தினம்(செவ்வாய்கிழமை) இனந்தெரியாத நபர்களினால் கடத்தப்பட்டார்.

அரிசி ஆலையிலிருந்து வீடு திரும்பிக்கொண்டிந்த சந்தர்ப்பத்திலேயே வீட்டிலிருந்து 10 மீற்றர் தொலைவில் வைத்தே அவர் கடத்தப்பட்டிருந்தார்.

இந்தநிலையில் கடத்தப்பட்ட வர்த்தகர் நேற்று (புதன்கிழமை) வாரிக்குட்டியூர் பகுதியில் வைத்து கடத்தல் காரர்களினால் விடுவிக்கப்பட்ட நிலையில் முச்சக்கர வண்டி ஊடாக அவர் வவுனியா நகரை வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

Related Posts