வல்வையில் கடலரிப்பை தடுக்க அணை அமைத்த பொது மக்கள் மீது பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல்

வல்வெட்டித்துறையில் பொது மக்கள் மீது வல்வெட்டித்துறைப் பொலிஸார் கண்மூடித்தனமாக தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.கடலரிப்பைத் தடுப்பதற்காக அணை அமைத்துக் கொண்டிருந்த பொது மக்கள் மீதே நேற்றுக் காலை பொலிஸார் இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

வல்வெட்டித்துறை நகர சபைக்குட்பட்ட கொத்தியால் என்ற கடற்கரையிலேயே தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸார் தாக்குதலை மேற்கொண்டதோடு, கடலிலிருந்து 300 மீற்றர் பரப்பில் மணலை அகழ்ந்ததாக பொய்யான வழக்கு ஒன்றை பதிவு செய்வும் பொது மக்களை கைது செய்யவும் முயன்றதாக அவர் தெரிவித்ததோடு, தன்னுடைய தலையீட்டில் பொது மக்களை விடுவித்ததாகவும் தெரிவித்தார்.

இதேவேளை அண்மைக்காலமாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் பொது மக்களுக்கு எதிராக குற்றஞ்சாட்டப்படுகின்ற அதேவேளை இதற்கு எதிராக போராட்டம் நடாத்தவும் பொது மக்கள் திட்டமிட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.