வலை உற்பத்தி இயந்திரங்கள் கையளிப்பு

FishNetஇந்திய அரசாங்கத்தினால் குருநகர் சீனோர் வலை தொழிற்சாலைக்கு 140 மில்லியன் ரூபா நிதியில் வலை உற்பத்தி இயந்திரங்கள் கையளிக்கப்பட்டு இயந்திரங்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றதாக இலங்கைக்கான இந்திய துணைத்தூதுவர் வே. மகாலிங்கம் தெரிவித்தார்.

பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் நோர்த் சீ நிறுவனத்தின் பொது முகாமையாளர் எப்.கேதீஸ்வரன் தலைமையில் இவ் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நைலோன், பப்ரிக் வலை கழுவுவதற்கான மற்றும் வலை மடிப்பு பொதியிடுதல் போன்றவற்றினை மேற்கொள்வதற்காக இந்திய அரசாங்கத்தினால் இயந்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இவ் இயந்திரங்கள் மூலம் சிறுவலை, பெருவலை உற்பத்திகளை மேற்கொள்வதுடன் கைகளினாலும் வலைகள் பின்னப்பட்டு மீனவர்களுக்கு வழங்கப்படுகின்றதாகவும் அவர் கூறினார்.

Recommended For You

About the Author: Editor