வலி.வடக்கு தவிசாளருக்கு இனந்தெரியாதோரால் கொலை மிரட்டல்!

sugirthan_tellippalaiவலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் இனந்தெரியாதவர்களினால் மிரட்டப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

நாளைய தினம் வலி.வடக்கு மக்களளால் உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட இருந்த நிலையில் வலி.வடக்கு தவிசாளர் சுகிர்தன் இவ்வாறு இனந்தெரியாதோரால் மிரட்டப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து தவிசாளர் தெரிவிக்கையில்,

நேற்று இரவு தொலைபேசியில் அழைப்பினை மேற்கொண்ட நபர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உண்ணாவிரத போராட்டத்தினை நடாத்த கூடாது என்றும் அவ்வாறு நடத்தப்பட்டால் தலையற்ற முண்டமே வீட்டுக்கு வரும் என்றும் மிரட்டினர்.

மேலும் அதே விடயத்தை குறுந்தகவல் மூலமும் அனுப்பியுள்ளனர். தொடர்ந்து காலை சுன்னாகத்தில் உள்ள அவரது வீட்டிற்கு முன்னால் எரிந்த மாட்டின் தலையினை கொண்டுவந்து வைத்து விட்டும் சென்றுள்ளனர்.

இது குறித்த தான் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக சுகிர்தன் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

3 கிராம அலுவலர் பிரிவுகளில் மீள்குடியமர்வதற்கு அனுமதி – அரச அதிபர்

வலி வடக்கு நில ஆக்கிரமிப்புக்கு எதிராக நாளை மறுதினம் கவனயீர்ப்பு போராட்டம்!