வலி.வடக்கு ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் 3 ஆண்டுகளில் இரு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது

sugirthan_tellippalaiவலி.வடக்கு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த மூன்று ஆண்டுகளில் இரண்டு தடவைகள் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இதனால், பல செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்துள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில், பிரதேச சபைத் தவிசாளர் சோ.சுகிர்தன் தெரிவித்துள்ளதாவது,

‘மீளக்குடியேறுவதற்கு அனுமதிக்கப்பட்ட வலி.வடக்குப் பகுதியில், மீளக்குடியேறும் மக்களுடைய தேவைகள் உட்பட பல்வேறு செயற்திட்டங்கள் தொடர்பாக பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துரையாட வேண்டியுள்ளது.

ஆனால், வலி.வடக்கு பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 2011ஆம் ஆண்டு 8 ஆம் மாதத்திலும் 2012 ஆம் ஆண்டு 9ஆம் மாதத்திலும் மட்டுமே இதுவரை கூடியுள்ளது.

இதனால், மீளக்குடியேறிய மக்களின் பல விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது’ என்றார்.

Recommended For You

About the Author: Editor