வலி வடக்கு உண்ணவிரதப் போராட்டத்தில் ரணில் பங்கேற்பார்

Ranil_Wickramasingheதமது சொந்த இடங்களில் தம்மை மீள்குடியமர்த்துமாறு கோரி வலி வடக்கில் எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

வலிவடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாவே இந்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த உண்ணாவிரத போராட்டத்தில் எதிர்க் கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன், ரணில் விக்கிரமசிங்க யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்துடனும் கலந்துரையாடவுள்ளார். அதுமட்டுமன்றி யாழ். நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர சிவாச்சாரியர் மற்றும் யாழ். ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகையையும் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

எதிர்வரும் 16 ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களுடன் முக்கியமாக கலந்துரையாடவுள்ளார். இந்த கலந்துரையாடல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி அலுவலகத்தில் நடைபெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor