வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய முத்திரை வரி கிடைக்கப்பெற்றுள்ளது!

வலி. மேற்கு பிரதேச சபைக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான முத்திரை வரி 94 லட்சம் ரூபா கிடைக்கப் பெற்றுள்ளது என்று சபை தெரிவித்துள்ளது.

திறைசேரியிலிருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்த பணத்தை வங்கியில் வைப்பிலிட்டு சபையின் அபிவிருத்தி வேலைகளுக்கு பயனபடுததுவதென்று முடிவெடுக்கப்பட்டுள்ளது என்றும் சபை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.

வலி.மேற்குப் பிரதேச சபைக்குரிய முத்திரை வரி கடந்த 2010 ஆம் ஆண்டிலிருந்து கிடைக்காத நிலையில் பிரதேச அபிவிருத்தி வேலைகள் பாதிக்கப்பட்டிருந்தன என்றும், சபைச் செயலரின் கோரிக்கைக்கு அமைவாக திறைசேரி 2010 ஆம் ஆண்டுக்குரிய முத்திரை வரியை அனுப்பிவைத்துள்ளது என்றும், இதனை வங்கியிலிட்டு பயன்படுத்துவது என்றும் கடந்த வாரம் இடம் பெற்ற மாதாந்த கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.