வலி. கிழக்கு பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் நியமனம்

vali-east-thurasingam-150தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்கு கீழுள்ள வலி. கிழக்கு பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக துரைசிங்கம் கணபதிப்பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார்.

தொங்கு நிலையில் இதுவரை காலமும் இயங்கி வந்த மேற்படி பிரதேச சபைக்கே புதிய தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார்.

மேற்படி பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் அன்னலிங்கம் உதயகுமார் முன்வைத்த 2014ஆம் ஆண்டிற்கான வரவு – செலவுத்திட்டம் இரண்டு தடவைகள் தோல்வியடைந்த பின்னர் அவர் தவிசாளர் பதவியிலிருந்து உள்ளூராட்சி சட்டத்திற்கமைவாக நீக்கப்பட்டார்.

இதனால் பிரதேச சபையின் இவ்வருட செயற்பாடுகள் மேற்கொள்ளப்படாமல், நிதியும் பயன்படுத்தப்படாமல் இருந்தது.

இந்தப் பிரதேச சபையில் 16 தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும், 5 ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts