வலிகாமம் வட பகுதி மக்களின் காணிகளை சுவீகரிப்போம்: யாழ். இராணுவக் கட்டளைத் தளபதி

Hathrusinga 001_CIவலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை சுவீகரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக யாழ்.மாவட்ட இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்கே தெரிவித்துள்ளார்.

பலாலி, மயிலிட்டி, காங்கேசன் துறை ஆகிய பகுதிகளில் உள்ள பொது மக்களின் காணிகளே அரசாங்கம் சுவீகரிக்கவுள்ளது.

பலாலி விமானத்தளம் விரிவாக்கம் மற்றும் காங்கேசன் துறை துறைமுக அபிவிருத்தி ஆகியவற்றிக்காக இக்காணிகள் சுவிகரிக்கப்படுவதாக அவர் கூறினார்.

யாழ்ப்பாணத்தில் நேற்றய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்காவில் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்பட்டு விமான நிலையம் அமைக்கப்பட்டதைப் போலவே யாழ்ப்பாணத்திலும் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படுகின்றன.

சுவீகரிக்கப்படும் காணிகளுக்கு தற்போதுள்ள காணிகளின் பெறுமதிக்கு ஏற்ப நஷ்டஈடு வழங்கப்படவுள்ளது.

இதேவேளை வலிகாமம் வடக்கு பகுதியில் பொது மக்களின் வீடுகளை இடித்து அழிக்கும் நடவடிக்கைகளில் இராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார்.