வலிகாமம் தெற்கில் இரண்டு பேரூந்து நிலையங்கள் திறப்பு

வடக்கு மாகாண சபையினால் குறித்தொதுக்கப்பட்ட நிதியில் இருந்து நிர்மானிக்கப்பட்ட சுன்னாகம் மற்றும் அச்சுவேலி ஆகிய பேரூந்து நிலையங்கள் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பேரூந்து நிலையம் 10 மில்லியன் ரூபா செலவிலும் அச்சுவேலி பேரூந்து நிலையம் 5 மில்லியன் ரூபா செலவிலும் நிர்மாணிக்கப்பட்டது.

வலிகாமம் தெற்கு பிரதேச சபைத் தலைவர் பிரசகாஷ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதீதியாக பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு திறந்துவைத்தார்.

இந்த பேரூந்து நிலையங்களை திறந்துவைக்கும் வைபவங்களில் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வெஸ்திரி அலென்ரின்,யாழ் மாவட்ட உள்ளுராட்சி மன்ற உதவி ஆணையாளர் ஜெயகரன் மற்றும் பிரதேச சபைச் செலயலாளர்கள் , உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

busstop2

busstop_open

bus hall2