வலிகாமம் கல்வி வலயத்திற்கு புதிய கல்வி பணிப்பாளர் நியமனம்

வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளருக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி தலைமையில் யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது.

வலிகாமம் கல்வி வலய புதிய கல்வி பணிப்பாளராக திரு.செ.சந்திரராஜா நியமிக்கப்பட்டார். இவருக்கான நியமனக் கடிதத்தினை ஆளுநர் வழங்கினார்.

ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சி.சத்தியசீலன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

valikamam

Recommended For You

About the Author: Editor