வற்றாப்பளை ஆலய உற்சவத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவை!

வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழாவினை முன்னிட்டு இலங்கை போக்குவரத்து சபை வடபிராந்தியத்திலுள்ள யாழ்ப்பாணம், பருத்தித்துறை, காரைநகர் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு , ஆகிய ஏழு சாலைகளிலும் விசேட பஸ் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்தியம் அறிவித்துள்ளது.

பொங்கல் தினத்தன்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை காரைநகர் ஆகிய பகுதிகளிலிருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயம் செல்லும் அடியார்கள் யாழ். மத்திய பஸ் நிலையத்திலும் பருத்தித்துறை காரைநகர் சாலைகளிலும் முற்பதிவினை மேற்கொள்ள முடியும் .

கிளிநொச்சி வவுனியா மன்னார் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளிலிருந்து செல்லும் அடியவர்கள் அந்தந்த சாலைகளில் பதிவினை மேற்கொள்ள முடியும்.

Related Posts