வரும் மாத இறுதிக்குள் மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க நடவடிக்கை

jaffna-university2011ஆம் ஆண்டில் க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களை 2013 மார்ச் மாத இறுதிக்குள் பல்கலைக்கழகங்களுக்குள் உள்வாங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என உயர் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற தீர்ப்பிற்கு இணங்க இம்முறை பல்கலைக்கழகத்திற்கு அதிகளவான மாணவர்களை உள்வாங்கவுள்ளதாக உயர் கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, 2012ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பல்கலைக்கழகத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களை இவ்வாண்டு இறுதிக்குள் பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உயர் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

இசட் புள்ளி பிரச்சினை தொடர்பில் 2011ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களை பல்கலைக்கழகத்திற்கு உள்வாங்குவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.