அடுத்த நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதியமைச்சரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் நேற்று பி.பகல் 1.33 மணியளவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், அரசாங்க ஊழியர்கள், தனியார் துறையினர், ஓய்வூதியக்காரர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், மாணவர்கள், குறைந்த வருமானம் பெறுவோர் உட்பட மக்கள் நலன்சார் முன்மொழிவுகள் அறிவிக்கப்பட்டன. அவைகள் வருமாறு:-
- அரச ஊழியர்களின் ஆகக்குறைந்த வருமானம் 30,000 ஆக அதிகரிப்பு
- சகல மக்களுக்கும் மருத்துவ பரிசோதனை 500 மில். ருபா ஒதுக்கீடு.
- குடிநீருக்கான கட்டணம் 10 வீதத்தினால் குறைவு (முதல் 25 அலகுகள் வரை)
- சகல ஊழியர்களுக்குமான குறைந்த சம்பளம் 15,000 ரூபாவாக அதிகரிப்பு
- அரச ஊழியர் கொடுப்பனவுகள் யாவும் அடிப்படை சம்பளத்துடன் சேர்ப்பு
- வாழ்க்கைச்செலவு கொடுப்பனவு 2,200 ரூபாவால் அதிகரிப்பு
- 180 நாள் பணிபுரிந்த தற்காலிக ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்
- அடுத்த வருடம் 50,000 ஆசிரியர் உதவியாளர் நியமனம். 9,500 ரூபா மாதாந்த கொடுப்பனவு.
- உள் நாட்டு பால் மா விலை 100 ரூபாவால் குறைப்பு: யோகட் விலை ரூ. 3 ஆல் குறைப்பு.
- ஓய்வூதியக்காரர்களின் சம்பள முரண்பாடுகள் நீக்கம்
- வெளிநாடுகளில் பணிபுரிவோர், ஆடைத்தொழிற்சாலையில் பணிபுரிவோருக்கு ஓய்வூதியம்
- பல்கலைக்கழக மகாபொல கொடுப்பனவு ரூ. 4,000 ஆக அதிகரிப்பு
- ஹோட்டல், சிறிய, நடுத்தர கைத்தொழிலாளர்களுக்கான மின்சாரக் கட்டணம் 25வீதத்தால் குறைப்பு
- தனியார்துறையினருக்கு ஆகக்குறைந்த சம்பளம் 10,000 ரூபா 500 ரூபா சம்பள உயர்வு
- 2020 இல் பல்கலைக்கழகத்துக்கு சேர்க்கும் மாணவர் தொகை ஒரு இலட்சமாக அதிகரிப்பு
- குழந்தைகளுக்கான பாலுணவு வகைகளுக்கு முழுமையான வரிவிலக்கு
- பல்கலைக்கழகம் தெரிவாகாத குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கு ரூ. 3,000
- ஆசிரியர்களுக்கு சலுகை விலையில் மோட்டார் சைக்கிள்
- முதியோருக்கான வங்கி வட்டியை 12 வீதமாக அதிகரிக்க யோசனை
- முதியோர்களுக்கான கொடுப்பனவு ரூ. 1,000 ரூபாவினால் அதிகரிப்பு
- திவிநெகும கொடுப்பனவு அதிகரிப்பு
- பால்மா இறக்குமதி வரி அதிகரிப்பு
- சிறுவியாபாரிகளுக்கான உள்ளூராட்சி மன்ற வரிகள் நீக்கம்
- ழூ 500 சிறியரக பஸ்கள் இறக்குமதி
- ஊழியர் சேமலாபநிதி 10 வருட அங்கத்துவம் இருந்தால் பங்கு இலாபம்
- மாகாண கிராமிய பாதைகளை இணைக்க 20,000 மில்லியன் ரூபா
- பெரும்போக விவசாயிகளுக்கு இலவச விதைநெல்
- நெல்லுக்கான உத்தரவாத விலை அதிகரிப்பு 34 ரூபாவாக இருந்து 40 ரூபா வரை
- தேயிலை மீள் நடுகை மானியம் ஒரு மில்லியனாக அதிகரிப்பு
- 1000 உள்நாட்டு மீன் பண்ணை கிராமங்களை அபிவிருத்தி செய்ய 200 மில். ரூபா
- சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டோருக்கு மாதாந்தம் 3000 ரூபா
- மருத்துவர்களுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு ரூ. 5 இலட்சம் கடன் திட்டம்.
- முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2,500 ரூபா கொடுப்பனவு, ரூ. 10,000 கடனுதவி
- புலமைப்பரிசில் சித்தி பெறுவோர் தொகை 25,000 ஆக அதிகரிப்பு கொடுப்பனவு ரூ. 1500 ஆக அதிகரிப்பு.
- ரூ. 350 உரமானியம் தொடரும்
- யானைகளால் ஏற்படும் சொத்து சேதங்களுக்கு நஷ்டஈடு