இவ்வருடத்திற்காக வரவு செலவு திட்டத்திலும் கல்விக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்றய தினம் மொரட்டுவ பிரின்சஸ் ஒப் வேல்ஸ் பாடசாலையில் இடம் பெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
மேலும், அதிகளவாக கல்விமான்களை உருவாக்குவதே எதிர்கால நாட்டிற்கு முக்கிய தேவையாகும் எனக் குறிப்பிட்ட அவர், கல்வி நடவடிக்கைகளில் பாதிப்பும் ஏற்படாதவாறு அதற்கான அனைத்து வளங்களையும் பெற்றுக் கொடுத்தல் அவசியமானதாகும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பிள்ளைகளுக்கான சிறந்த எதிர்காலத்தினை உருவாக்குவதற்கான அனைத்து செயற்பாடுகளையும் அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது எனக் கூறிய ஜனாதிபதி, தற்போதைய அரசாங்கம் கல்விக்கே அதிக முன்னுரிமை வழங்கி வருகின்றது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோன்று எதிர்காலத்தினை சீரழிக்கும் போதைப் பொருற்களின் பிடியில் இருந்து இளைய சமுதாயத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் முழு அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.