Ad Widget

வரவுசெலவுத் திட்டத்தை விமர்சிக்கலாம், எதிர்க்கக்கூடாது! – சம்பந்தன்

புதிய அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு வழங்குவது தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கத்துவ கட்சிகளிடையே முரண்பாடு தோன்றியுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு நகரிலுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர் ”வரவு – செலவுத் திட்டத்தை விமர்சிக்கலாம். அதற்காக அதனை எதிர்க்க வேண்டிய தேவை இல்லை.

கடந்த காலங்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பு வரவு – செலவுத் திட்டத்தை ஆதரிக்கவில்லை. ஆனால் தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் நிதானமாக பக்குவமாக நடந்து கொள்கின்றார்கள் என்பதை சர்வதேசத்துக்கு காட்ட வேண்டிய தேவை உள்ளது.

நீண்ட பயணமொன்றை பயணித்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் அவசரப்பட்டு அரசுடனான தொடர்புகளை துண்டித்து விட முடியாது” என்றும் குறிப்பிட்டார்.

Related Posts