வயோதிபப் பெண் கழுத்து வெட்டிக் கொலை

உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் வீடொன்றில் இருந்த வயோதிப்பெண், நேற்று ஞாயிற்றுக்கிழமை (22) இரவு கழுத்து வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்பவரே இதில் உயிரிழந்துள்ளார்.

இந்த வயோதிப் பெண்ணும் அவரது கணவரும் வீட்டில் தனிமையில் வசித்து வந்துள்ளனர். சம்பவம் நடைபெற்ற தினம் வயோதிப்பெண், உணவை உண்டு கைகழுவச் சென்ற போது, பின்னால் வந்த இனந்தெரியாத நபர், வயோதிப் பெண்ணின் கழுத்தை அறுத்துள்ளார்.
கறுத்து அழுபட்ட நிலையில் வயோதிப் பெண் வீட்டுக்குள் ஓடிச்சென்று விறாந்தையில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

இவர்களது பிள்ளைகள், புலம்பெயர்ந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர்.

இக்கொலை தொடர்பில் மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts