வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய நியமனத்தில் பாரிய மோசடி!- பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டு

யாழ்ப்பாணத்தலிருந்து வன்னிக்கான பதிலீட்டு ஆசிரிய இடமாற்றத்தில் பல்வேறு குழறுபடிகளும் ஊழல் மோசடிகளும் இடம் பெற்றுள்ளதாக பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

2013 ஆம் ஆண்டிற்கான வன்னிக்கும், தீவகத்திற்காக பதிலீட்டு ஆண்டிற்கான ஆசிரிய இடமாற்றத்தில், இடமாற்றம் பெற்றுள்ள ஆசிரியர்களின் பெயர் விபரங்கள் வலயக்கல்வி அலுவலகங்களில் தற்போது காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இத்தகவல் வெளியாகியுள்ளது.

இவ் இடமாற்றங்களில் பல குழறுபடிகளும் உள்ளகச் செல்வாக்குகளும் இடம் பெற்றுள்ளதாகப் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது.

தீவகத்திற்கு முதல் நியமனம் பெற்று கடந்த ஜனவரி மாதம் யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்ட ஆசிரியர்கள் பலருக்கு, மீண்டும் 2013 ஆம் ஆண்டில் வன்னிக்கும், தீவகத்திற்காக பதிலீட்டு ஆண்டிற்கான ஆசிரிய இடமாற்றத்தின் போதும் வன்னிக்கு இடமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்நிலையில் வடமாகாணக் கல்வியமைச்சில் உள்ள ஒரு சில அதிகாரிகளின் நடவடிக்கையே இதற்கு காரணமென்று பாதிக்கப்பட்ட ஆசிரியர்களால் தெரிவிக்கப்படுகின்றது

Recommended For You

About the Author: Editor