வவுனியா சந்தைப்பகுதியில் இன்று அதிகாலை துண்டுப்பிரசுரம் ஒன்று சகல கடைகளிலும் ஒட்டப்பட்டும் சில பகுதிகளில் வீசப்பட்டும் காணப்படுகிறது
இதில் வந்தேறு குடிகளுக்கு வர்தகமையமா?என்ற தலையங்கத்திலேய அச்சிடப்பட்டுள்ளது பொருளாதார வர்த்தக மையம் அமைவது தொடர்பில் வவுனியாவில் கடும் சர்ச்சைகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது இதை மையமாக கொண்டு கலவரத்தையும் சாதி பிரச்சினையையும் தூண்டும் விதமாக விஷமிகளால் இவ்வாறான இழிவான பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
வவுனியா விளைபொருள் விற்பனையாளர் சங்கத்தினர் வர்த்தக மையத்தினை வவுனியா தாண்டிகுளத்தில் அமைக்குமாறு கடந்த 27.06.2016 அன்று உண்ணாவிரத போராட்டத்தில் குதித்தனர் அதன் பின்பு நேற்றைய தினம் கமக்கார அமைப்பினரால் ஓமந்தை பகுதியில் அமைக்குமாறு போரட்டம் ஒன்றை நடத்தியிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்
இச்சூழ்நிலையில் இவ்வாறான துண்டுப்பிரசுரங்களை வெளியிடுவதன் மூலம் மக்களிடையே கலவரங்களை தூண்டுவதற்காகவே திட்டமிட்டு செய்யப்படுகிறது என்பது அறியமுடிகிறது
எனவே அணைத்து தரப்பினரும் இதணை மனதில் வைத்து சிந்தித்து செயற்பட வேண்டும் என்பதே மக்களினுடைய விருப்பாகும்