வணக்க தலங்களில் மிருக பலிக்கு தடை

மத வணக்க தலங்களில் மேற்கொள்ளப்படும் மிருக பலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவினை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை பிறப்பித்துள்ளது.

சிலாபம் முன்னேஸ்வரம் கோயில் தொடர்பிலான மனு விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் எந்தவொரு மத ஸ்தலங்களிலும் மிருக பலியினை மேற்கொள்வதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்வுத்தரவினால் நாடுமுழுவதிலும் சில குறிப்பிட்ட இந்து ஆலயங்களில் நடைபெறுகின்ற வேள்விகள் இனிமேல் நடைபெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.