வணக்கதலங்களை புனரமைப்பதை விடுத்து யுத்தத்தால் நலிவுற்ற மக்களின் வாழ்வாதாரத்தை புனரமையுங்கள்

வடக்கு கிழக்கில் யுத்தத்தால் சிதைவடைந்த விஹாரைகள் உள்ளிட்ட வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதில் அரசாங்கம் காட்டும் அக்கறையை, யுத்தத்தால் நலிவுற்றுப் போயுள்ள மக்களின் வாழ்வாதார மேம்பாட்டில் காட்டுவதில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பி னர் தர்மலிங்கம் சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.

யுத்தப் பாதிப்பிற்குள்ளான வணக்கஸ்தலங்களை புனரமைப்பு செய்வதற்கு கடந்த வாரம் அமைச்சரவையில் அங்கீகாரம் வழங்கப்பட்டது. இதுகுறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்குறித்தவாறு குறிப்பிட்டார்.

யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்படுத்தப்படாமல், பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படாமல் உள்ளதை சுட்டிக்காட்டியுள்ள சித்தார்த்தன், இவை பற்றி அரசாங்கம் அறிந்திருந்தும் எவ்வித ஆக்கபூர்வமான செயற்பாடுகளையும் முன்னெடுக்க வில்லையென குறிப்பிட்டுள்ளார்.

Related Posts