வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனுக்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை நாளை 30ஆம் திகதி வவுனியாவில் முன்னெடுக்கவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பு அறிவித்துள்ளது.
நாட்டை இரத்தக் காடாக்க வட மாகாண முதலமைச்சர் உள்ளிட்ட குழுவினர் முன்னெடுக்கும் பிரிவினைவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்