வட மாகாண மக்களின் பிறப்பு, இறப்பு அத்தாட்சிப்பத்திரங்கள் கணனியில் பதிவேற்றம்

gov_logவடமாகாண மக்களின் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப்பத்திரங்களை கணனியில் பதிவேற்றம் செய்துள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கையால், காணாமற்போன அல்லது அழிவடைந்த பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சி பத்திரங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்வதில் வடமாகாண மக்களுக்கு எவ்வித அசௌகரியமும் ஏற்படாது என சுட்டிகாட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய மாகாணத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் பிறப்பு மற்றும் இறப்பு அத்தாட்சிப் பத்திரங்களின் பிரதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என பதிவாளர் நாயகம் ஈ.எம்.குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

பிறப்பு பதிவு செய்யப்படாத எவரேனும் இருந்தால் உடனடியாக உரிய பிரதேச செயலகத்திற்கு சென்று அதற்கான தீர்வைப் பெற்றுக்கொள்ளுமாறு பதிவாளர் நாயகம் ஆலோசனை வழங்கியுள்ளார்.

Recommended For You

About the Author: Editor