வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

jail-arrest-crimeவட மாகாண சபையின் எதிர்க்கட்சி தலைவர் கந்தசாமி கமலேந்திரன் உட்பட மூவரையும் எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியிலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

நெடுந்தீவு பிரதேச சபை தலைவர் டானியல் றெக்ஷிசன் கொலை விவகாரம் தொடர்பில் கமலேந்திரன், றெக்ஷிசனின் மனைவி மற்றும் இளைஞன் ஒருவன் கைதுசெய்யப்பட்டு கடந்த 17 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போது அவர்களை இன்று 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இந்த நிலையில் ஊர்காவற்றுறை நீதவான் எஸ்.எம்.ஆர்.மகேந்திரராஜா முன்னிலையில் அவர்களை இன்று ஆஜர்படுத்திய மூவரையும் எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதிகள் சார்பில் ஆஜராகவேண்டிய சட்டத்தரணிகள் மன்றில் இன்று ஆஜராகமையை அடுத்தே இந்தவழக்கு ஒத்திவைக்கப்பட்டது.