Ad Widget

வட மாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி காலமானார்

வடமாகாண சபை உறுப்பினர் வீரவாகு கனகசுந்தர சுவாமி (வயது-67) நேற்று செவ்வாய்க்கிழமை மாலை காலமானார்.

Kanasunthara-suwamy

இவர் நீண்டகாலமாக புற்று நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே மரணமடைந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் கிராம சேவையாளராக இவர் கடமையாற்றி ஓய்வு பெற்ற பின்னார், கடந்த 2013ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற வடமாகாண சபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வடமாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டார்.

Related Posts