வட மாகாண சபையின் புதுவருட ஆரம்ப நிகழ்வுகள் ஆளுநர் தலைமையில் நடைபெற்றது

வட மாகாண சபையின் புதுவருட ஆரம்ப நிகழ்ச்சிகள் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் 01 ஜனவரி 2013 அன்று காலை வட மாகாண ஆளுநர் ஜிஏ.சந்திரசிறி அவர்கள் தலைமையில் நடைபெற்றது.கொடியேற்றல் நிகழ்வினை அடுத்து இரண்டு நிமிட வணக்கத்துடன் மங்கள விளக்கேற்றல் நடைபெற்றது. சமயத் தலைவர்களின் ஆசி உரைகளும் இடம்பெற்றன.

வட மாகாண ஆளுநர் தனது உரையில் அனைவருக்கும் தனது புதுவருட வாழ்த்துக்களை தெரிவித்தார். மேலும், அதி மேதகு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்களின் வழிகாட்டுதலில் கடந்த ஆண்டு வட மாகாணத்தில் மிகப் பாரிய அளவில் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் நடைபெற்றதாகவும் அவற்றினை வெற்றிகரமாக மேற்கொள்ள உதவிய அனனவருக்கும் நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்தார். இந்த வருடம் செயற்படுத்தப்படவேண்டிய வேலைத்திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என்பன சிறந்த முறையில் திட்டமிடப்பட்டுள்ளதாவும் அதற்கு அமைவாக அனைவரும் ஒன்றிணைந்து வட மாகாண சபையின் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டுமெனவும் கேட்டுக்கொண்டார். பொது மக்களின் தேவைகள் உடனடியாக பரிசீலிக்கப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

வட மாகாண பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி ரமேஸ், ஆளுநரின் செயலாளர் திரு.இ.இளங்கோவன், வட மாகாண சபையின் செயலாளர்கள், பிரதிப்பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள், ஆணையாளர்கள், பிராந்திய ஆணையாளர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் விசேட விருந்தினர்களாக பாராளுமன்ற உறுப்பினர் மு.சந்திரகுமார், யாழ் மாநகர சபை முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராசா, யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் ஆகியோர் பங்குபற்றியிருந்தார்கள்.
alunar_function2