வட மாகாண சபைக் கட்டிடம் திறப்பு

வட மாகாண சபை கட்டிடம் இன்று வெள்ளிக்கிழமை காலை எட்டு மணிக்கு திறந்துவைக்கப்பட்டுள்ளது.

vicki-santherasri

யாழ். கைதடியில் 450 மில்லியன் ரூபா நிதியில் நிர்மாணிக்கப்பட்ட புதிய கட்டிடத்தினை வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி மற்றும் வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் இணைந்து திறந்துவைத்தனர்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினாகளான எம்.ஏ.சுமந்திரன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.