வட மாகாண ஊழியர்கள் 150 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்கி வைப்பு

angajan ramanathanவடக்கு மாகாண சபையினால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டு, பிரதம செயலாளரினால் இடை நிறுத்தப்பட்ட 40 ஊழியர்களுடன் 150 புதிய ஊழியர்களுக்கும் நிரந்தர நியமன கடிதங்கள் வழங்கப்பட்டன.

இந்நியமனங்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அலுவலகத்தில் வைத்து அமைப்பாளர் அங்கஜன் இராமநாதன் மற்றும் இராமநாதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.

28.02.2012 ஆம் ஆண்டு 32 அரச திணைக்களங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் 40 ஊழியர்கள் நியமிக்கப்பட்டனர்.

இவர்கள் தமக்கான வேலை நாட்கள் முடிவடைந்துவிட்டதாக கூறி கடந்த 28.02.2013 ல் பிரதம செயலாளரினால் இடை நிறுத்தப்பட்டனர்.

இடைநிறுத்தப்பட்ட ஊழியர்கள் பல்வேறு தரப்பினருடன் சந்தித்து கலந்துரையாடியும், மீண்டும் அரச திணைக்களங்களில் நியமிக்கப்படவில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் அங்கஜன் இராமநாதனிடம் தெரிவிக்கப்பட்டு பின்னர் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியுடனான கலந்துரையாடலை தொடர்ந்தே இவர்கள் மீண்டும் உள்வாங்கப்பட்டனர்.