வட மாகாண ஆளுநரின் பதவிக்காலம் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நீடிப்பு!

GA Chandrasiriவடமாகாண ஆளுநர் மேஜர்ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறியின் பதவிக் காலம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மேலும் ஐந்து வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று அலரி மாளிகையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் அவர் வடமாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டார்.

அவருடைய ஐந்து ஆண்டு பதவிக்காலம் இன்று 2014ஆம் ஆண்டு ஜூலை 11ஆம் திகதியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.