வட மாகாணத்தில் மின்சாரமில்லாத 164 கிராமங்களுக்கு இவ்வருட இறுதிக்குள் மின்சாரம்!

வட மாகாணத்தில் மின்சாரமில்லாத 164 கிராமங்களுக்கு இவ்வருடம் டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் இறுதிக்குள் மின்சாரம் வழங்கப்படுமென எரிசக்தி மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்தார்.

baviththera-vanniyarachchi

இன்று பாராளுமன்றத்தில் சஜித் பிரேமதாஸ எழுப்பிய வாய்மொழிமூல கேள்விக்கு விடையளிக்கும் போதே எரிசக்தி மின்சக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி இத்தகவலை தெரிவித்தார்.

வட பகுதி மக்களுக்காக மின்சாரத்தை பெற்றுக் கொள்வதற்கான செலவுகளை திவி நெகும –வாழ்வாதார திட்டத்தின் கீழ் மின்சார பில்லுடன் கழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர வட பகுதி மக்களுக்கு மேலும் சலுகையடிப்படையில் மின்சாரத்தை வழங்க முடீயுமா என்பது குறித்தும் ஆராயப்படுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

நுரைச்சோலை மின் நிலையத்துக்கு நிலக்கரியை இறக்குமதி செய்வதில் ஊழல் இடம் பெற்றதாக நான் கூறவில்லை .நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவே கூறினேன். அந்த நஷ்டத்தை எவ்வாறு ஈடுசெய்யலாம் என்பது குறித்து ஆராய்ந்து மீண்டும் அந்த நஷ்டத்தை அறவிடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.