வட மாகாணத்தின் கல்வித்தரத்தை உயர்த்த ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு தேவை: ஆளுநர்

alunar-santherasriவட மாகாணத்தின் கல்வித் தரத்தை உயர்த்த ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் சிறந்த சேவையை வழங்க வேண்டும். அவ்வாறு சிறப்பான சேவையின் மூலமே மாணவர்களிடம் இருந்து சிறந்த பெறுபேற்றினைப் பெற முடியும்’ என்று வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

யாழ். தேசிய கல்வியல் கல்லூரியில் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன் தலைமையில் நடைபெற்ற, புதிதாக ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட ஆசிரியர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், ‘வட மாகாணத்தில் கடந்த 3 வருடங்களில் கல்வி பாரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது’ என்றார்.

‘9ஆம் இடத்தில் இருந்து கல்வித்தரம் 8ஆம் இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளது. 8ஆம் நிலையில் இருந்து 7ஆம் நிலைக்கு கொண்டு வருவதற்கு ஆசிரியர்கள் சிறந்த சேவையை வழங்கி மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கல்வியற் கல்லூரிகளில் கல்வி கற்று ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட 212 ஆசிரியர்களும் மகிந்த சிந்தனையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு 1000 பாடசாலை அபிவிருத்தி திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 56 ஆசிரியர்களும் கலந்துகொண்டனர்.

வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, ஆளுநரின் செயலாளர் இளங்கோவன், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ். சத்தியசீலன், வடமாகாண கல்விப் பணிப்பாளர் வை. செல்வராசா மற்றும் கல்வி அமைச்சின் அதிகாரிகள, ஆசிரியர்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts