வட மாகாணசபைத் தேர்தலுக்கு சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியம்!- சுமந்திரன்

Sumanthiran MPவட மாகாணசபைத் தேர்தல்களின் போது சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் அவசியமானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியவிடம் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.

சுயாதீனமானதும் நீதியானதுமான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் சர்வதேச கண்காணிப்பாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.

பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் செயலாளர்களுடன் தேர்தல் ஆணையாளர் சந்திப்பொன்றை நடாத்தினார்.

வட மாகாணசபைத் தேர்தல் குறித்து அறிவிக்கப்படாத காரணத்தினால் இது தொடர்பில் தற்போதைக்கு கருத்து வெளியிட முடியாது என தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னர் கட்சி செயலாளர்களுடன் கலந்தாலோசித்து இது குறித்து தீர்மானிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.