வட மாகாணசபைத் தேர்தலில் TNA வெற்றி பெற்றாலும் அரசை தோற்கடிக்க முடியாது – விமல் வீரவன்ச

vimal-weravansaதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றியடைந்தாலும், அரசாங்கத்தை தோற்கடிக்க முடியாது என வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நடைபெற்ற சந்திப்பொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனை விரும்பாத தரப்பினர் பிரிவினைவாதத்தை தூண்டி நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் ஏற்படுத்த முயற்சிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.ரத்துபஸ்வல சம்பவம் இவ்வாறான ஒன்றே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் எதிர்க்கட்சித் தலைவரின் பணிகளை மேற்கொண்டு வருகின்றது. ஈ ஒன்று பறந்தாலும் அமெரிக்கத் தூதரகம் அதற்கு எதிராகவும் அறிக்கை வெளியிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி வைக்க சிலர் முயற்சித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலர் பணம் கொடுத்து ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்